“கௌரவன்“ பற்றிய எனது விமர்சனம் செல்வி. சி. மகிஷவர்த்தினி, 8ஆம் வட்டாரம், பேசாலை. நாமறிந்த மகாபாரதம் குருஷேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு கதையாகும். எல்லா வழிகளிலும் நயவஞ்சகமாக தோற்கடிக்கப்பட்டிருந்த, எங்கள் கதாநாயகன் துரியோதனன் தன் பக்கக் கதையை எடுத்துக்கூறும் கதைக்காவியமே கௌரவன். இதுவரை (நான் இப்புத்தகத்தை வாசிக்கும் வரை) மகாபாரதம் என்றால் முதலில் ஞாபகம் வருவது கிருஸ்ணரும், பாண்டவர்களுமே. ஆனால், இப் புத்தகத்தை வாசித்த பிறகு இக்கதையின் கதாநாயகன் துரியோதனனே எம் மனதில் நிரம்பியிருப்பான். எந்தவொரு விடயத்திற்கும் பல கோணங்கள் உண்டு. அவற்றை நாம் பார்க்கும் விதத்தில்தான் அதிலுள்ள நியாயம் மற்றும் உண்மை என்பன எமக்குத் தெரியும். அந்த வகையில் வில்லனான துரியோதனனின் பக்கம் இருந்து எழுதிய கௌரவன் எனும் நூல் என்னைப் பொறுத்தமட்டில், வியாசர் எழுதிய மகா பாரதத்தை விடவும் சிறப்பான நூலாகக் காணப்படுகின்றது. “கௌரவன்” எனும் புத்தகத்தின் கதாநாயகனான துரியோதனன் உண்மையில் எப்படிப்பட்டவன்? என்ற கேள்விக்கு நாம் பின்வருமாறு பதில் அளிக்கலாம். வீரமும் தன்மான...